வவுனியா மாநகரசபை மேயரின் பதவி நீக்கத்தை கண்டித்தும், வடக்கு ஆளுனருக்கு எதிராகவும் வவுனியா நகரப் பகுதியில் 50 வீதமான வர்த்தக நிலையங்கள் இன்று(29.06.2026) காலை பூட்டப்பட்டுள்ளன.வடக்கு ஆளுனரின் ஜனநாயக படுகொலையை கண்டித்து வர்த்தக நிலையங்கள் மதியம் வரை பூட்டிவைப்பதற்கும் பாரிய போராட்…
வவுனியா மாநகரசபை மேயரின் பதவி நீக்கத்தை கண்டித்தும், வடக்கு ஆளுனருக்கு எதிராகவும் வவுனியா நகரப் பகுதியில் 50 வீதமான வர்த்தக நிலையங்கள் இன்று(29.06.2026) காலை பூட்டப்பட்டுள்ளன.வடக்கு ஆளுனரின் ஜனநாயக படுகொலையை கண்டித்து வர்த்தக நிலையங்கள் மதியம் வரை பூட்டிவைப்பதற்கும் பாரிய போராட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.வர்த்தக நிலையங்கள் பூட்டு குறித்த கோரிக்கைக்கு அமைய வடக்கு ஆளுனரின் செயற்பாட்டை கண்டித்து வவுனியா நகரப் பகுதியில் 50 வீதமான வர்த்தக நிலையங்கள் சுமார் 3 மணிநேரம் மூடப்பட்டு எதிர்ப்பை வெளிபடுத்தியிருந்தன.அத்துடன், ஏனைய வர்த்தக நிலையங்கள் வழமைப் போல் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

