ஹம்பாந்தோட்டை மாநகரசபையின் முதல் மேயரான எராஜ் ரவீந்திர பெர்னாண்டோவின் சடலம், கொழும்பு, திம்பிரிகட்டியாய பகுதியில் அவர் வசித்துவந்த வீடொன்றில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள தகவல்களின்படி, அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம…

ஹம்பாந்தோட்டை மாநகரசபையின் முதல் மேயரான எராஜ் ரவீந்திர பெர்னாண்டோவின் சடலம், கொழும்பு, திம்பிரிகட்டியாய பகுதியில் அவர் வசித்துவந்த வீடொன்றில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள தகவல்களின்படி, அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

முன்னாள் நகரபிதா திடீரென காலமானார் என்பதை ஹம்பாந்தோட்டை மாநகரசபையின் தற்போதைய மேயர் டி. ஏ. காமினி  உறுதிப்படுத்தியுள்ளார்.