தெலுங்கானா மாநிலத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்று திரும்பிய வாலிபர் தனது மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேரை கொடூரமாக வெட்டி கொலை செய்ததுடன் தன் மீது புகார் அளித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் விவசாய…
தெலுங்கானா மாநிலத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்று திரும்பிய வாலிபர் தனது மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேரை கொடூரமாக வெட்டி கொலை செய்ததுடன் தன் மீது புகார் அளித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் விவசாயி ஒருவர் ஏற்கனவே திருமனமான நிலையில் 17 வயது கல்லூரி மாணவியை காதல் திருமணம் என்ற பெயரால் துன்புறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது,
அந்த சிறுமியை தன்னுடன் பேச வேண்டும் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று ராஜ்குமார் துன்புறுத்தியதாக தெரிகிறது.கொடூரக்கொலை இத்துடன் அவர் மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் 7 ஆண்டுகளுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்படும் பிரிவுகளுடன் பொலிஸார் வழக்கு பதிவு செய்ததால் தனிநபர் ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்டார். தன்மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்ய காரணமான சிறுமி குடும்பத்தை பழிதீர்க்க திட்டமிட்டு நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சிறுமி வீட்டுக்கு சென்றார். அந்த சமயத்தில் சிறுமியை தன்னோடு அழைத்துச் செல்ல முயற்சி செய்தார். தடுக்க முயன்ற சிறுமியின் தாய், பாட்டியை வெட்டிச் சாய்த்தார்.அதன் பிறகு அந்த சிறுமியை பலவந்தமாக காரில் ஏற்றிக்கொண்டு 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாகர் ஏரி அருகே இழுத்துச் சென்றார். அங்கே சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்து அதன்பிறகு கழுத்தை அறுத்து மிகக் கொடூரமாக கொலை செய்தார்.
மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிள்ளைகளை பார்க்க ஆசையாக இருக்கிறது என வீட்டிற்கு வந்து மனைவி குழந்தைகளை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
அதன் பிறகு தனது தந்தை அருண்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு "நான் இந்த 6 பேரையும் கொலை செய்துவிட்டேன். நான் கூட இறந்து விடுகிறேன்" என்று கூறியுள்ளார்.

