செய்திகள் 18 November 2025 மாத்தறை மாவட்ட இளைஞர் விளையாட்டு விழா: முலட்டியான இளைஞர் சம்மேளனம் சம்பியன் செய்திகள் 18 November 2025 35வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாத்தறை மாவட்ட இளைஞர் விளையாட்டு விழா, அண்மையில் மாத்தறை உயன்வத்த விளையாட்டு மைதானத்தில்…

செய்திகள்

18 November 2025

மாத்தறை மாவட்ட இளைஞர் விளையாட்டு விழா: முலட்டியான இளைஞர் சம்மேளனம் சம்பியன்

செய்திகள்

18 November 2025

35வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாத்தறை மாவட்ட இளைஞர் விளையாட்டு விழா, அண்மையில் மாத்தறை உயன்வத்த விளையாட்டு மைதானத்தில் அதிக எண்ணிக்கையிலான வீரர், வீராங்கனைகளின் பங்களிப்புடன் நிறைவடைந்தது. இதில், மூன்றாம் இடத்தை கோட்டபொல இளைஞர் சம்மேளனமும் (Kotapola Youth Society Federation), இரண்டாம் இடத்தை மாவட்ட இளைஞர் சம்மேளனமும் (Matara District Youth Society Federation), சம்பியன் பட்டத்தை முலட்டியான இளைஞர் சம்மேளனமும் (Mulatiyana Youth Society Federation) வென்றெடுத்தன.

இந்நிறைவு விழாவில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ், மக்கள் பிரதிநிதிகள், மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.