மாவனல்லை - கடோல் பாலம் (செங்கற் பாலம்) பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் காயமடைந்து மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரணாயக்கவிலிருந்து மாவனல்லை நோக்கிப் பயணித்த சிறிய ரக வேன் ஒன்றும், மாவனல்லையிலிருந்து உஸ்ஸாபிட்டிய நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர…

மாவனல்லை - கடோல் பாலம் (செங்கற் பாலம்) பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் காயமடைந்து மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரணாயக்கவிலிருந்து மாவனல்லை நோக்கிப் பயணித்த சிறிய ரக வேன் ஒன்றும், மாவனல்லையிலிருந்து உஸ்ஸாபிட்டிய நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொரி ஒன்றும் கடோல் பாலத்தின் மீது நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மாவனல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணை

சம்பவம் இன்று (31) நண்பகல் அளவில் நடைபெற்றுள்ளது. விபத்தின் போது வானில் பயணித்த நால்வரே காயமடைந்து மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதோடு, ஏனையவர்கள் சாதாரண காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மாவனல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.