பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய நிலையில் காணாமல் போன விசேட வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வைத்தியர் நேற்று (23) காலை வழமைபோல் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில், அதன் பின்னர் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போது, வைத்தி…
பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய நிலையில் காணாமல் போன விசேட வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியர் நேற்று (23) காலை வழமைபோல் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில், அதன் பின்னர் காணாமல் போயிருந்தார்.
இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போது, வைத்தியரின் கார் மீகஹகிவுல பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணித்தமை பதிவாகியிருந்தது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில், பதுளை–மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் வைத்தியரின் கார் நேற்று இரவு கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பொலிஸார், குற்றச் சம்பவ இடங்களை ஆராயும் தடயவியல் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அப்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், மஹியங்கனை–மாப்பாக்கடவெவ பகுதிக்கு அருகிலுள்ள பாறையொன்றில் இருந்து காணாமல் போன விசேட வைத்தியரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.












