இலங்கையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் அரசாங்கத்திடம் தேர்தலை நடத்துமாறு கோரியுள்ளார்.மக்கள் பிரதிநிதித்துவம் இன்றி மாகாண சபைகள் சிறந்த…

இலங்கையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் அரசாங்கத்திடம் தேர்தலை நடத்துமாறு கோரியுள்ளார்.மக்கள் பிரதிநிதித்துவம் இன்றி மாகாண சபைகள் சிறந்த முறையில் இயங்குவதாக சிலர் கூறிய போதிலும் அது யதார்த்த பூர்வமானது அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.அரச அதிகாரிகள் நிர்வாகம் செய்யும் போது அவர்கள் மக்களுக்கு நேரடியாக பொறுப்பு கூற வேண்டிய அவசியம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளார். எனவே நாட்டின் மக்களுக்கு நேரடியாக பொறுப்பு சொல்லக்கூடிய வகையில் மாகாண சபைகளுக்கு பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார். மக்களின் பிரதிநிதித்துவம் இன்றி மாகாணசபைகள் இயங்குவது ஓர் குற்றமாகும் என அவர் தெரிவித்துள்ளார். மாகாண சபை தேர்தலை நடத்தாது விட்டால் அது நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபை உள்ளூராட்சி மன்றங்களிலும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி இயங்க முடியும் என்ற நிலையை உருவாக்குமல்லவா என கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 15ம் திகதி உலக ஜனநாயக தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளதாகவும் அந்த திகதியிலாவது அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை எப்போது எந்த முறையில் நடத்துவது என்பதை அறிவிக்க வேண்டுமென மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.