டி.கே.ஜி. கபில தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவன் ‘கெஹெல்பத்தற பத்மே’ என்பவனின் துப்பாக்கிச் சூட்டாளராகச் செயல்பட்ட, பொம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன என்ற 'மாட்டியா', மலேசியாவில் பதுங்கியிருந்தபோது அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செ…
டி.கே.ஜி. கபில தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவன் ‘கெஹெல்பத்தற பத்மே’ என்பவனின் துப்பாக்கிச் சூட்டாளராகச் செயல்பட்ட, பொம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன என்ற 'மாட்டியா', மலேசியாவில் பதுங்கியிருந்தபோது அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவர் வியாழக்கிழமை (ஜூன் 25) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு கடத்தப்பட்டார். கொட்டுவொட, யாகொடமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய இவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு நோட்டிஸ்' (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்தது. கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி அன்று , திட்டமிட்ட குற்றவாளியான 'பஸ்பொட்டா' எனப்படும் சமன் ரோஹித்த பெரேரா மற்றும் அவருடன் இருந்த மற்றொருவர் ஆகியோரைச் சுட்டுக் கொன்றதோடு, அங்கு நின்றிருந்த பலர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி காயப்படுத்திய குற்றச்சாட்டு இவர் மீது உள்ளது. இவர் வியாழக்கிழமை (ஜூன் 25) இரவு 9.45 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா (Air Asia) விமான சேவையின் ஏ.கே.-047 (AK-047) ரக விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டார். கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த இவரை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், மேலதிக விசாரணைக்காகப் பேலியகொடவில் உள்ள கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் பலத்த பாதுகாப்புடன் ஒப்படைக்கப்பட்டார்.\

