முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் மனைவி படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம், நேற்று(31.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையி…

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் மனைவி படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம், நேற்று(31.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

புதுக்குடியிருப்பு பகுதியில் தேவிபுரம் அ. பகுதியில் இரவு வேளையில், கணவன் - மனைவி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கணவன் செயலால் பரிதவிக்கும் பிள்ளைகள்

இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்த மனைவி, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர், நான்கு பிள்ளைகளின் தாயார் என்றும் தெரிவந்துள்ளது.

மனைவி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய கணவனும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15