மன்னார் மறைமாவட்டம் அளவக்கை பங்கின் வாழ்க்கை பெற்றான் கண்டல் புனித நீக்கிலார் ஆலய நுழைவாயில் அலங்கார வளைவு மற்றும் புதிய மணிக்கோபுரம் ஆகியவை நேற்றுமுன் தினம் (24.07.2026) திறந்து வைக்கப்பட்டன. புதிதாக அமைக்கப்பட்ட ஆலய நுழைவாயில் அலங்கார வளைவு மற்றும் புதிய மணிக்கோபுரம் ஆகியவை மன…

மன்னார் மறைமாவட்டம் அளவக்கை பங்கின் வாழ்க்கை பெற்றான் கண்டல் புனித நீக்கிலார் ஆலய நுழைவாயில் அலங்கார வளைவு மற்றும் புதிய மணிக்கோபுரம் ஆகியவை நேற்றுமுன் தினம் (24.07.2026) திறந்து வைக்கப்பட்டன. புதிதாக அமைக்கப்பட்ட ஆலய நுழைவாயில் அலங்கார வளைவு மற்றும் புதிய மணிக்கோபுரம் ஆகியவை மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.திருப்பலி ஒப்புக்கொடுப்பு அதனைத் தொடர்ந்து ஆயரின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. கிறிஸ்து நேச ரட்னம் அடிகளார் இ ஆயரின் செயலர் அருட்தந்தை அன்ரனி அடிகளாரும் கலந்து கொண்டிருந்தனர்.

அளவக்கை பங்குத்தந்தை அருட்பணி. யேசுபரநாதன் (டிக்சன்) அடிகளார் மற்றும் ஆலய பங்கு மக்களின் பூரண ஒத்துழைப்பாலும் குறித்த நிகழ்வுகள் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.