மன்னார் நகரசபை பிரிவில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மன்னார் நகரசபையின் ஏற்பாட்டில் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், முப்படையுடன் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த வேலைத்திட்டம் இன்றைய தின…

மன்னார் நகரசபை பிரிவில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மன்னார் நகரசபையின் ஏற்பாட்டில் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், முப்படையுடன் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த வேலைத்திட்டம் இன்றைய தினம் காலை வேளையில் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.டெங்கு பரிசோதனை வேலைத்திட்டம்இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டு குறித்த டெங்கு பரிசோதனை விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அதன்படி இன்றைய தினம் அரச அலுவலகங்கள், தங்கும் விடுதிகள், வர்த்தக நிலையங்களில் டெங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது.இதன்போது டெங்கு நுளம்பு பெருகுவதற்கு காரணமான இடங்கள் அடையாளம் காணப்பட்டால் அவற்றை கட்டுப்படுத்த ஆலோசனைகள் வழங்கப்படும். அறிவித்தல்களை மீறி டெங்கு நுளம்பின் பெருக்கத்திற்கு உடந்தையாக உள்ள உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.