இலங்கையில் மரண தண்டனை இறுதியாகநிறைவேற்றப்பட்ட ஆண்டு 1976 ஆகும். அதன்பின்னர் நடைமுறையில்மரண தண்டனை நிறைவேற்றப்படாவிட்டாலும், நாட்டின் மேல்மற்றும் உயர் நீதிமன்றங்கள் கொலைமற்றும் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தொடர்ந்து மரண தண்டனைத் தீர்ப்புகளைவழங்கி வருகி…
இலங்கையில் மரண தண்டனை இறுதியாகநிறைவேற்றப்பட்ட ஆண்டு 1976 ஆகும். அதன்பின்னர் நடைமுறையில்மரண தண்டனை நிறைவேற்றப்படாவிட்டாலும், நாட்டின் மேல்மற்றும் உயர் நீதிமன்றங்கள் கொலைமற்றும் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தொடர்ந்து மரண தண்டனைத் தீர்ப்புகளைவழங்கி வருகின்றன.
எனினும்,அத்தீர்ப்புகளை நிறைவேற்றுவது ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகவே காலம்காலமாக நீடித்து வருகிறது. இந்நிலையில்,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற ‘ரதமத் எகட’ (நாடாகஒன்றிணைவோம்) தேசியச் செயற்பாட்டுக் குழுவுக்கூட்டத்தில், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதுகுறித்துக் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது இலங்கையில் தலைதூக்கியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலானது தனிப்பட்ட மனிதர்களின் சீரழிவைத் தாண்டி, நாட்டின் பொருளாதாரம்,சுற்றுலாத்துறை மற்றும் சமூக ஒழுங்குமுறைக்கே சவாலாகஉருவெடுத்துள்ளது. போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்படும் பெருந்தொகையானகறுப்புப் பணம், நாட்டின் சட்டக்கட்டமைப்பையும் எதிர்காலச் சந்ததியினரையும் ஒட்டுமொத்தமாகச் சிதைத்துவருகிறது. இத்தகையதொரு தேசியப் பேரழிவைத் தடுத்துநிறுத்த சாதாரண சட்ட நடவடிக்கைகள்போதாது என்பதால், குற்றவாளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில்கடுமையான சட்டங்களை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்காகச் சட்டத் திருத்தங்கள், பிணைநடைமுறைகள் மற்றும் அரச பகுப்பாய்வாளர்அறிக்கைகளை விரைவுபடுத்துதல் போன்ற பல்துறை சார்ந்தநடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதன் நீட்சியாகவே மரண தண்டனை போன்றகடுமையான தண்டனைக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதுகுறித்தும் பரிசீலிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், மனித உரிமைச் சூழல்களையும்சட்டரீதியான விவாதங்களையும் தாண்டி, நாட்டின் எதிர்காலச்சந்ததியைக் காக்க இத்தகைய கடுமையானமுடிவுகள் காலத்தின் தேவையாகப் பார்க்கப்படுகின்றன. அரச அதிகாரிகளுடன் மதத்தலைவர்களும் பெற்றோர்களும் கைகோர்த்துச் செயற்படுவதன் மூலமே இந்தச் சமூகப்புற்றுநோயை வேரோடு பிடுங்கி எறியமுடியும்.
எவ்வாறாயினும்,மரண தண்டனையை மீள நடைமுறைப்படுத்துவதுஎன்பது சர்வதேச மனித உரிமைஅமைப்புகளினதும் உள்நாட்டு மனித உரிமை ஆர்வலர்களினதும்கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் எதிர்கொள்ளக்கூடும். நீதித்துறையில் தவறுகள் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள்மற்றும் குற்றவாளிகளைச் திருத்துவதற்கான வாய்ப்புகள் போன்ற தார்மீகக் கோட்பாடுகளும்இதன்போது விவாதப் பொருளாகின்றன.
ஆயினும்,நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைநிலைநாட்டுவதிலும், போதைப்பொருள் மாஃபியாக்களின் பிடியில் இருந்து இளம்தலைமுறையைக் காப்பாற்றுவதிலும் அரசாங்கம் தனது உறுதியான நிலைப்பாட்டைக்கைவிடக் கூடாது. தண்டனைகள் கடுமையானதாகஇருக்கும்போது மட்டுமே சட்டவிரோதச் செயல்களில்ஈடுபடுவோரிடையே முறையான பயம் உருவாகும்.
இந்த விடயத்தில், நீதித்துறையின் செயற்பாடுகள் எந்தவித அரசியல் தலையீடுகளும்இன்றி வெளிப்படைத்தன்மையுடன் துரிதப்படுத்தப்பட வேண்டும். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதோடு,குற்றத்தின் பின்னணியிலுள்ள பெருமுதலாளிகள் மற்றும் வலைப்பின்னல்கள் முழுமையாக அடையாளம் காணப்பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான இந்த மெகாபோரில் அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு அடியும் நாட்டுமக்களின் நீண்டகாலப் பாதுகாப்பையும் சமூக நலனையும் உறுதிப்படுத்துவதாகஅமைய வேண்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின்மீதுள்ள நம்பிக்கை பலப்படுவதோடு, தேசத்தைக் கட்டியெழுப்பும் இலக்கும் வெற்றிகரமாக நிறைவேறும். 13.08.2026












