மருத்துவ அதிகாரிகளுக்கான இடைநிலைத் தரத்தை (Intermediate grade) உருவாக்குவது தொடர்பான ஆலோசனைகளை ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக ஆறு பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்கவினால், சுகாதார மற்றும் ஊட…

மருத்துவ அதிகாரிகளுக்கான இடைநிலைத் தரத்தை (Intermediate grade) உருவாக்குவது தொடர்பான ஆலோசனைகளை ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக ஆறு பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்கவினால், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பணிப்புரைக்கமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் செயலாளராக மருத்துவர் அமில சுரங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர் டப்ளியூ.கே. விக்ரமசிங்க, மருத்துவர் சமிந்த சமரக்கோன், சிரேஷ்ட பேராசிரியர் எச்.டி.என்.பி. ஓபாத்த மற்றும் சிரேஷ்ட பேராசிரியர் திலீப் டி சில்வா ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்மொழியப்பட்டுள்ள இடைநிலைத் தரத்தை வரையறுத்தல், அதில் உள்ளடக்கப்பட வேண்டிய மருத்துவப் பிரிவுகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மருத்துவ அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் முறைமை, அவர்களின் சேவைக்காலம், அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் மற்றும் இடமாற்ற நடைமுறைமை என்பன குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள இந்தக் குழுவுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15