மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான யுத்தம் காரணமாக உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் கடுமையான நெருக்கடிகள் உருவாகியுள்ள போதிலும், நிலக்கரி உற்பத்தித் துறை வரலாறு காணாத இலாபத்தைப் பதிவு செய்து வருவதாகச் சர்வதேச…

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான யுத்தம் காரணமாக உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் கடுமையான நெருக்கடிகள் உருவாகியுள்ள போதிலும், நிலக்கரி உற்பத்தித் துறை வரலாறு காணாத இலாபத்தைப் பதிவு செய்து வருவதாகச் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரானினால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.மாற்று எரிபொருளாக நிலக்கரி இதனால் பல நாடுகள் தங்களது மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, அதிகளவில் கிடைக்கக்கூடிய நிலக்கரியை மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக, ஆசிய பிராந்தியத்தில் ஜப்பான், தென் கொரியா, பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளன. இதன் காரணமாகத் தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த நிலக்கரி நிறுவனங்களின் அரையாண்டு இலாபம் இரட்டிப்பாகியுள்ளதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

எவ்வாறாயினும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், எரிபொருள் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாகவே பல நாடுகள் காலநிலை மாற்ற இலக்குகளைத் தற்காலிகமாகப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நிலக்கரிப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.