மட்டக்களப்பு றோட்டராக்ற் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற “உங்களுக்கான மேடை – Rotaract Grand Smash” டென்னிஸ் போட்டியில் பங்குபற்றிய வீரர், வீராங்கனைகளுக்கு 140 சான்றிதழ்களும் 106 கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இளைஞர்களின் பங்கேற்பு, விளையாட்டுத்திறன், ஆரோக்கியமான போட்டி மனப்பா…

மட்டக்களப்பு றோட்டராக்ற் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற “உங்களுக்கான மேடை – Rotaract Grand Smash” டென்னிஸ் போட்டியில் பங்குபற்றிய வீரர், வீராங்கனைகளுக்கு 140 சான்றிதழ்களும் 106 கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இளைஞர்களின் பங்கேற்பு, விளையாட்டுத்திறன், ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை மற்றும் சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

மட்டக்களப்பில் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதுடன், இளைஞர்களுக்கிடையிலான நட்புறவையும் ஒற்றுமையையும் வளர்க்கும் வகையில் போட்டி அமைந்திருந்தது.

போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய லேக் வியூ டென்னிஸ் மைதானத்திற்கும், போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் றோட்டராக்ற் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.

போட்டியின் நிறைவில் வெற்றியாளர்களுக்கு கிண்ணங்களும், பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.