உன்னிச்சைக் குளத்தில் இருந்து 'குடிநீர்' என்ற பெயரில் சகல தேவைகளுக்கும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நீரை உறிஞ்சுகின்றது என விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் நீர் இன்றி விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதால், விவசாய குளங்களில் இருந்து குடிநீரை பெற…

உன்னிச்சைக் குளத்தில் இருந்து 'குடிநீர்' என்ற பெயரில் சகல தேவைகளுக்கும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நீரை உறிஞ்சுகின்றது என விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் நீர் இன்றி விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதால், விவசாய குளங்களில் இருந்து குடிநீரை பெறுவதை நிறுத்தி குடிநீருக்கு ஒரு தனி நீர் திட்டம் அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட விவசாயிகள் இன்றைய தினம் (31.08.2026) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.நீர் குறைவு

குறித்த அறிக்கையில் மேலும்,

தற்போது ஏற்பட்டுள்ள காலநிலையினால் மாவட்டத்தில் பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளதுடன் விவசாய குளங்களில் இருந்து நீர் மட்டம் வரலாறு காணமுடியாதளவிற்கு நீர் குறைந்துள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் 65 வீதமான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்ற போதிலும் 40 வீதமான விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்கப்படுகின்றது.

இந்த மாவட்டத்தில் பெரிய குளமான உன்னிச்சைக் குளத்தில் இருந்து விவசாயத்துக்கு நீர்பாசனம் வழங்கப்படுகின்றதுடன் இந்த குளத்தில் இருந்து மாவட்டத்திலுள்ள மக்களுக்கு குடிநீரை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நீரை பெற்று வருகிறது.

இதனால் விவசாயத்திற்கான நீரை பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஒரு இலாப நோக்கு நிறுவனம். ஆனால் இலாபத்திற்காக ஒரு மாவட்டத்தின் உணவு உற்பத்தியும் எதிர்கால தலை முறையையும் பலி கொடுக்க முடியாது.விவசாயத்திற்கு தனி கொள்கை

இரணைமடுவில் விவசாயிகள் ஒன்றுபட்டு எதிர்த்த பின்னர் விவசாய குளங்களில் கை வைக்காதீர்கள் என்ற பாடம் கிடைத்தது. அதை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் கடல் நீர் சுத்திகரிப்பு, வுனியாவில் தனி குடிநீர் நீர் தேக்கமும் அமைக்கப்பட்டு குடிநீருக்கு தனி கொள்கையும், விவசாயத்திற்கு தனி கொள்கையும் பின்பற்றப்படுகின்றது. ஆனால் மட்டக்களப்பில் மட்டும் ஏன் இந்த இரட்டை நீதி? இங்கு 65 வீதமான மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர். ஆனால் 40 வீதமான விவசாய நிலங்களுக்கு மட்டும் நீர்ப்பாசனம் வழங்கப்படுகின்றது. இவ்வாறு இருக்கையில் உன்னிச்சைக் குளத்தில் இருந்து 'குடிநீர்' என்ற பெயரில் சகல தேவைகளுக்கும் நீர் வழங்கல் சபை நீரை உறிஞ்சுகிறது.

இதனால் விவசாயிகளின் விவசாயம் யால, மகா போகங்கள் தண்ணீரின்றி அழிவு, வெள்ள காலத்தில் விவசாயிகள் மாத்திரமில்லாமல் கட்டுமானங்களும் அழிவடையும் நிலை, கடன் சுமையில் விவசாயிகளின் இளம் பிள்ளைகளின் கல்வியும் எதிர்காலமும் கேள்விக்குறி, மாவட்ட பொருளாதாரம் சீரழிவு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறதுடன் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15