மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய சமுர்த்திப் பணிப்பாளராக ஜெயானந்தி திருச்செல்வம் பொறுப்பேற்பு வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய சமுர்த்திப் பணிப்பாளராக திருமதி.ஜெயானந்தி திருச்செல…

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய சமுர்த்திப் பணிப்பாளராக ஜெயானந்தி திருச்செல்வம் பொறுப்பேற்பு

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய சமுர்த்திப் பணிப்பாளராக திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக தனது பதிவியினை பொறுப்பேற்றுள்ளார்.

மாவட்ட செயலகத்தின் சமுர்த்தி பிரிவில் நடைபெற்ற பொறுப்பேற்பு நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் மொஹமட் பஸீர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு புதிய பணிப்பாளருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சமுர்த்தித் திட்டங்கள் மேலும் வலுப்படுத்தும் வகையில் அவரது பணிக்காலம் வெற்றிகரமாக அமைய வேண்டுமென அனைவரும் தங்களது நல்வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமுர்த்தி பணிப்பாளராக கடமையாற்றிவந்த எஸ்.ராஜ்பாபு இடமாற்றம் பெற்று கோறளைப்பற்று – வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக இன்று பதவியேற்கும் நிலையில் கடந்த நான்கு வருடங்களாக கோறளைப்பற்று – வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய சமுர்த்திப் பணிப்பாளராக கடமையேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.