நாட்டின் பல சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று (7) பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து பாதுகாப்பு பணிகளில் ஈட…
நாட்டின் பல சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று (7) பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன், இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவினரும் தொடர்ச்சியான ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்தின சிறைச்சாலைக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இதனிடையே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து அங்கிருந்து 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, மாற்றப்பட்ட கைதிகளில் 42 பேர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலையில் மொத்தம் 980 கைதிகள் இருப்பதாகவும் சிறைச்சாலை அத்தியட்சகர் மோகன் தெரிவித்துள்ளார்.
அனைத்து கைதிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும், சிறைச்சாலையின் பாதுகாப்பு நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.












