கிரிபத்கொட நகரிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணி ஒன்றினை, போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படும் வழக்கு, கம்பஹா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பிரதிவாதிகளான முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா மற்றும் முன்னாள் பி…

கிரிபத்கொட நகரிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணி ஒன்றினை, போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படும் வழக்கு, கம்பஹா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதிகளான முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக, கம்பஹா இரண்டாவது மேல் நீதிமன்ற நீதிபதி நயனா செனவிரத்ன முன்னிலையில் புதன்கிழமை (15) அன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட சட்டத்தரணி சமதரி பியசேன, ஒவ்வொரு பிரதிவாதிக்கும் எதிரான குற்றப்பத்திரிகைகளை நீதிபதி முன்னிலையில் கையளித்தார்.

இதன்போது, இவ் வழக்கினை விரைவாக ஆரம்பிப்பதற்குத் தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் வழக்குக் கோப்புகளை நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்குமாறு, அரச சிரேஷ்ட சட்டத்தரணிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.