“ஹரக் கட்டா” மற்றும் பல குற்றவாளிகள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது என்று தீர்ப்பளித்த சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை சட்டமா அதிபர் இன்று(20) கொழும்ப…

“ஹரக் கட்டா” மற்றும் பல குற்றவாளிகள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை  தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது என்று தீர்ப்பளித்த சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை சட்டமா அதிபர் இன்று(20) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.ஹரக் கட்டா

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் இருந்தபோது தப்பிச் செல்ல சதி செய்ததாக உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஹரக் கட்டா மற்றும் மேலும் நான்கு சந்தேகநபர்கள் தொடர்பான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அரச தரப்பு சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி, மேல் நீதிமன்றம் வழங்கிய முந்தைய தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

எனவே, இந்த வழக்கில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என அரச தரப்பு வலியுறுத்தியது.

மேலும், சந்தேகநபர்கள் சார்பில் முன்வைக்கப்படும் எந்தவொரு கோரிக்கையும் இனிமேல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அரச சட்டத்தரணி தெரிவித்தார்.வெலிசர சிறைச்சாலை எனினும், சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், கடந்த ஜூலை 30ஆம் திகதி, PTA சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சுட்டிக்காட்டினர்.

அதனால், தற்போது மேல் நீதிமன்றத்தில் செல்லுபடியாகும் குற்றப்பத்திரிகை எதுவும் இல்லை எனவும், இந்நிலையில் சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பதற்கு சட்டபூர்வமான அடிப்படை இல்லை எனவும் அவர்கள் வாதிட்டனர்.

மேலும், ஹரக் கட்டா மற்றும் இணை சந்தேகநபரான மிடிகம ருவன் தற்போது வெலிசர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் சிறைச்சாலை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அல்லாமல் கடற்படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பாதுகாப்பு தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

Zoom ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஹரக் கட்டாவும், தாம் வெலிசர சிறைச்சாலையில் கடற்படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.மருத்துவ சிகிச்சை

அங்கு தமக்கு அருகில் கடற்படை அதிகாரிகள் இருப்பதை காண்பிக்கும் வகையில், அவர் தனது கெமெராவை அவர்களை நோக்கித் திருப்பினார்.

மேலும், பழைய தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது முழங்கால் பிரச்சினைக்காக தங்காலை ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும், ஆனால் தற்போது வெலிசர சிறைச்சாலையில் தனக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இதற்கு பதிலளித்த சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி, அரச வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய சிறைச்சாலை வளாகங்களில் இராணுவத்தினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி ராகல, முந்தைய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் ஏற்கனவே மேன்முறையீடு செய்துள்ளதால், இந்த நிலையில் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவதோ அல்லது அவர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவை பிறப்பிப்பதோ பொருத்தமானதாக இருக்காது என தெரிவித்தார்.ஒத்திவைப்பு

சந்தேகநபர்கள் சார்பில் கோரப்படும் எந்தவொரு நிவாரணத்தையும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோருமாறு நீதிபதி பாதுகாப்பு தரப்பு சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், சந்தேகநபர்கள் விளக்கமறியல் காவலில் வைக்கப்பட்டிருந்தால், சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்திற்கு அமைய அவர்கள் சிறைச்சாலை அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

அத்துடன், சந்தேகநபரின் உடல்நலப் பிரச்சினைக்கு தேவையான முறையான மருத்துவ சிகிச்சையை வழங்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு செப்டம்பர் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening