மிஸ் ஸ்ரீலங்கா வேல்ட் 2026 ஆரம்ப விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் அழைப்பை, தாய்லாந்தைச் சேர்ந்த மிஸிஸ் வேர்ல்ட் 2025 சானிதா சீடகெட் கிரேதோர்ன் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த அழைப்பு, பேங்காக்கில் உள்ள தாய்லாந்திற்கான இலங்கைத் தூதர் இ.ஏ.எஸ். விஜயந்தி எதிரிசிங…
மிஸ் ஸ்ரீலங்கா வேல்ட் 2026 ஆரம்ப விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் அழைப்பை, தாய்லாந்தைச் சேர்ந்த மிஸிஸ் வேர்ல்ட் 2025 சானிதா சீடகெட் கிரேதோர்ன் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த அழைப்பு, பேங்காக்கில் உள்ள தாய்லாந்திற்கான இலங்கைத் தூதர் இ.ஏ.எஸ். விஜயந்தி எதிரிசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது முறைப்படி வழங்கப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட இலங்கைத் தூதர் விஜயந்தி எதிரிசிங்க, இந்த வருகை இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுற்றுலா, ஆடை அலங்காரத் துறை, சர்வதேச அழகிப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்தார். இதனிடையே, மிஸ் ஸ்ரீலங்கா வேல்ட் 2026 போட்டிக்கான அதிகாரபூர்வ செய்தியாளர் சந்திப்பு 2026 ஜூலை 4ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

