ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களில் தளபதி என்று அழைக்கக்கூடிய செவ்வாய் பகவான் சுமார் 45 நாட்கள் ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றுகிறார். அந்த வகையில், ஆகஸ்ட் 2ஆம் திகதி புதன் பகவானுடைய வீடான மிதுன ராசிக்கு செவ்வாய் பகவான் பெயர்ச்சியாகிறார். அவர் செப்டம்பர் 18ஆம் திகதி வரை மிதுனத்தில…
ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களில் தளபதி என்று அழைக்கக்கூடிய செவ்வாய் பகவான் சுமார் 45 நாட்கள் ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றுகிறார். அந்த வகையில், ஆகஸ்ட் 2ஆம் திகதி புதன் பகவானுடைய வீடான மிதுன ராசிக்கு செவ்வாய் பகவான் பெயர்ச்சியாகிறார்.
அவர் செப்டம்பர் 18ஆம் திகதி வரை மிதுனத்திலேயே சஞ்சரிக்க உள்ளார். அந்த வகையில் செவ்வாய் பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு நன்மையாக அமையப்போகிறது என பார்ப்போம். நன்மை கிடைக்கும் இராசிகள் மேஷம்: இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கொடுக்க போகிறது. உங்களுடைய தன்னம்பிக்கை இரட்டிப்பாக கூடிய வாய்ப்புகளை உருவாக்கப் போகிறது. வேலை தொடர்பாக நீங்கள் மேற்கொள்கின்ற பயணம் மிகச்சிறந்த லாபத்தையும் வெற்றியும் கொடுக்கப்போகிறது. அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும்.
மிதுனம்: இவர்களுக்கு ஆற்றலும் தன்னம்பிக்கையும் சுறுசுறுப்பு உருவாகும்.இவர்களுடைய திறமை இந்த காலகட்டங்களில் எல்லோரும் கவனிக்கும் படியாக வெளிப்படும். வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு, திடீர் இடம் மாற்றம் போன்ற அற்புதமான வாய்ப்புகள் தேடி வரும்.
கன்னி: இவர்களுக்கு தொழில் வாழ்க்கையில் மிக உயர்ந்த உச்சத்தை தொடக்கூடிய காலகட்டமாக அமையப்போகிறது.உழைப்பிற்கு ஏற்ற பலன்களை இவர்கள் எந்த தடையும் இல்லாமல் பெறப்போகிறார்கள். பொருளாதாரத்தில் முன்பை விட மிக சிறந்த பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக ஆரோக்கிய பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.
தனுசு:இதனால் இவர்களுக்கு வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல நேர்மறையான ஆற்றல் வரப்போகிறது. எதிர்பாராத லாபம் உண்டாகும்.மறைமுக எதிரிகள் தொல்லை முற்றிலும் விலகும். தேவையற்ற வாக்குவாதங்களை மட்டும் தவிர்த்துக் கொண்டால் வெற்றி நிச்சயம்.












