மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய மற்றும் ஊவா குடா ஓயா பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையில், 24 ஓட்டுநர்களுக்கு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் மற்றும் தெவிநுவர தேவாலயங்களின் வழிபாட்டு நிகழ்வுகளை முன்னிட்டு தற்போதைய காலகட்டத்தில் மொ…

மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய மற்றும் ஊவா குடா ஓயா பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையில், 24 ஓட்டுநர்களுக்கு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் மற்றும் தெவிநுவர தேவாலயங்களின் வழிபாட்டு நிகழ்வுகளை முன்னிட்டு தற்போதைய காலகட்டத்தில் மொனராகலை ஊடாக நாளாந்தம் ஏராளம் வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன.

அவ்வாறான வாகனங்களில் சட்டவிரோத உதிரிப்பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளமை, கரும்புகை வெளியிடல் போன்ற பல்வேறு குறைபாடுகள் காரணமாக பாதசாரிகளும், வர்த்தகர்களும் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.போக்குவரத்து சோதனை

இதனையடுத்து வெல்லவாய மற்றும் ஊவா குடா ஓயா பொலிஸ் நிலையங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் மோட்டார் வாகன பரிசோதகர்களுடன் இணைந்து நடத்திய விசேட போக்குவரத்து சோதனையின் போது மேற்கண்ட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் இயங்கும் பழுதடைந்த வாகனங்கள் மற்றும் பல்வேறு சட்டவிரோத பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை மேற்கொள்வது இந்த விசேட சோதனையின் முக்கிய நோக்கமாகும். இதன்போது வீதிப் போக்குவரத்துக்கு தகுதியற்ற, கடுமையான குறைபாடுகள் கொண்ட மற்றும் சட்டத்திற்கு முரணான பாகங்கள் பொருத்தப்பட்ட 24 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை ஓட்டிய 24 சாரதிகளுக்கு உடனடி தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.விசேட நடவடிக்கை இருப்பினும், சம்பந்தப்பட்ட சாரதிகள் தங்களது வாகனங்களில் உள்ள குறைபாடுகளையும் பிழைகளையும் சரிசெய்வதற்கு 14 நாட்கள் அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அந்த காலக்கெடுவுக்குள், வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி தங்களது வாகனங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரத் தவறும் சாரதிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், போக்குவரத்து விதிகளை மதிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற விசேட நடவடிக்கைகள் தொடர்ந்து கடுமையாக செயல்படுத்தப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.