பேரணி ஒன்றில் கலந்துகொண்டவர்களுக்காகச் செலவிடப்பட்ட தொகையைக் குடிவரவு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஊடாகச் செலுத்துமாறு அதன் பொது முகாமையாளருக்கு அழுத்தம் கொடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அம…

பேரணி ஒன்றில் கலந்துகொண்டவர்களுக்காகச் செலவிடப்பட்ட தொகையைக் குடிவரவு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஊடாகச் செலுத்துமாறு அதன் பொது முகாமையாளருக்கு அழுத்தம் கொடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி முகமது நிஹால் 14 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை (01) அன்று தீர்ப்பளித்துள்ளார்.

இரண்டு குற்றச்சாட்டுக்களுக்காக விதிக்கப்பட்ட 14 ஆண்டுகள் தண்டனைக்காலமும், ஏழு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் வகையில் ஒரே நேரத்தில் (ஒன்றன் மீது ஒன்றாக அல்லாமல்) செயற்படுத்துமாறு மேல்நீதிமன்ற நீதிபதி சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.