தெஹிவளை – கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CCID) இன்று ஆஜராகியுள்ளார். மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் ஷிரான…

தெஹிவளை – கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CCID) இன்று ஆஜராகியுள்ளார்.

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையிலேயே தனசிறி அமரதுங்க வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.