வெளிநாடுகளில் ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதுவரை நடைபெற்ற முன்பதிவில் ரூ. 4.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன…

வெளிநாடுகளில் ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதுவரை நடைபெற்ற முன்பதிவில் ரூ. 4.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் எதிர்வரும் 23-ஆம் திகதி வெளியாகவுள்ளது.

பல்வேறு தடைகளுக்கு மத்தியில் வெளியாகாமல் இந்த படம் தற்போது உலகம் முழுவதும் சுமார் 7,000 முதல் 8,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், வெளிநாடுகளில் ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது.

எதிர்வரும் காலங்களிலும் வசூலில் மாபெரும் சாதனையை ஜனநாயகன் திரைப்படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.