கரடியகான குப்பை அகற்றும் நிலையத்திற்கு எதிரில் உள்ள வேரஸ் கங்கையில் முதலைகளால் தின்று தீர்க்கப்பட்டுக் கொண்டிருந்த இளம் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது என பிலியந்தல பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் ஷெஹான் தாரக (22வயது ) என்ற இளைஞர் ஆவார். கரடியகான குப்பை அகற…

கரடியகான குப்பை அகற்றும் நிலையத்திற்கு எதிரில் உள்ள வேரஸ் கங்கையில் முதலைகளால் தின்று தீர்க்கப்பட்டுக் கொண்டிருந்த இளம் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது என  பிலியந்தல  பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஷெஹான் தாரக (22வயது ) என்ற இளைஞர் ஆவார்.

கரடியகான குப்பை அகற்றும் நிலையத்திற்கு எதிரில் உள்ள வேரஸ் கங்கையில் மனித சடலம் ஒன்றை முதலை ஒன்று தின்று கொண்டிருப்பதை குப்பை அகற்றும் நிலையத்தின் ஊழியர்கள் அவதானித்துள்ளனர்.

இதன்பின்னர், இது குறித்து பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டதுடன், பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டபோது, வேரஸ் கங்கையில் கிடந்த சடலத்தை முதலை ஒன்று தின்று கொண்டிருப்பதை உறுதிப்படுத்தினர்.

எனினும், அப்பகுதி மக்களின் உதவியுடன் சடலத்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், முதலையின் பிடி அதற்குத் தடையாக இருந்ததால், வனவிலங்கு அதிகாரிகளை அழைத்து சடலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.