கொழும்பு – பிலியந்தலை, கரடியானா ஆற்றுப்பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் முதலை உண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாயுரபுர பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஷெஹான் தாரகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். கரடியானா குப்பைக்…
கொழும்பு – பிலியந்தலை, கரடியானா ஆற்றுப்பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் முதலை உண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாயுரபுர பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஷெஹான் தாரகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கரடியானா குப்பைக்கிடங்கிற்கு முன்னால் உள்ள ஆற்றில், முதலை உண்ட நிலையில் சடலம் மிதப்பதை அப்பகுதி பணியாளர்கள் அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் சடலத்தை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும், சடலம் முதலையின் பிடியில் இருந்ததால் அதனை உடனடியாக மீட்பதில் சிரமம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, சடலத்தை பாதுகாப்பாக மீட்பதற்காக வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
About this report
This page covers முதலையின் பிடியில் 22 வயது இளைஞரின் சடலம்; பல மணிநேரம் மீட்கப் போராட்டம்! and is filed in the Local section of KottuRoti. It was first recorded on 2 September 2026. The report brings together 2 source articles. KottuRotipreserves the original reporting language and identifies the outlet behind each account so readers can distinguish source material from the aggregated story.
Follow the source links below to inspect the publisher's original wording, context and later corrections. This page may be refreshed when the underlying story develops or another outlet publishes relevant coverage; its publication and update times help readers identify those changes. For broader context, browse the latest news in this language, the breaking news feed, or the chronological Sri Lanka news archive.
The lead report on this page comes from Battinaatham (Tamil) and is presented in Tamil. KottuRoti classifies it under Local and keeps the source attribution visible rather than presenting aggregated material as independent eyewitness reporting. When more coverage becomes available, the source list and story record can expand while this canonical page remains stable for readers and search engines.