தமிழக முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாளில் அவர் வெட்டிய 'மேங்கோ வெண்ணிலா கேக்' (Mango Vanilla Cake) தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ளது. சென்னை பேக்கரி ஒன்றில் தயாரிக்கப்பட்ட இந்த கேக், சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து தற்போது வாடிக்கையாளர்களால் 'சிஎம் கேக்' (CM Cake)…
தமிழக முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாளில் அவர் வெட்டிய 'மேங்கோ வெண்ணிலா கேக்' (Mango Vanilla Cake) தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ளது. சென்னை பேக்கரி ஒன்றில் தயாரிக்கப்பட்ட இந்த கேக், சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து தற்போது வாடிக்கையாளர்களால் 'சிஎம் கேக்' (CM Cake) என்றே அழைக்கப்பட்டு பெருமளவில் ஆர்டர் செய்யப்படுகிறது.
முதலமைச்சர் விஜய்க்கு நடிகை த்ரிஷா வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட மேங்கோ வெண்ணிலா கேக்' தான் இவ்வளவு பிரபல்யமாகியுள்ளது.
இந்நிலையில், அந்த நிழற்படத்தில் இடம் பிடித்திருந்த மாம்பழ கேக் தற்போது அதிகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களில் மாத்திரம் சுமார் 400 கேக் முன்பதிவு அந்த கேக்கை தயாரித்த பெண் கூறுகையில், விஜய்யின் பிறந்தநாள் நிழற்படத்துக்குப் பின்னர் அந்த கேக்கிற்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும், சிலர் அதனை CM கேக் என அழைக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் சுமார் 400 கேக்குகளுக்கான முன்பதிவுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு நிழற்படம், குறிப்பிட்ட கேக்கிற்கு எதிர்பாராத அளவில் பிரபலத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

