அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, முதியோர் கொடுப்பனவை இன்று (03.7.2026) முதல் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முதியோர் கொடுப்பனவு இதற்கமைய, முதலாம் கட்டத்தி…

அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, முதியோர் கொடுப்பனவை இன்று (03.7.2026) முதல் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முதியோர் கொடுப்பனவு

இதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 621,761 முதியோர்களுக்காக மொத்தம் 3,108,805,000.00 ரூபாய் பணம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 76,139 முதியோர்களுக்காக 380,695,000.00 ரூபாய் பணம் அவர்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.