நிலவும் சீரற்ற மழைக்கால வானிலையை முன்னிட்டு, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேலும் நீடித்துள்ளது. இந்த சிவப்பு எச்சரிக்கை நாளை (05) காலை 9.00 மணி வரை அமுலில் இருக்கும்…
நிலவும் சீரற்ற மழைக்கால வானிலையை முன்னிட்டு, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேலும் நீடித்துள்ளது.
இந்த சிவப்பு எச்சரிக்கை நாளை (05) காலை 9.00 மணி வரை அமுலில் இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கண்டி மாவட்டத்தின் கங்க இஹள கோரளை, உடுதும்பர மற்றும் பஸ்பாகே கோரளை, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.
அதேவேளை, கட்டம்–2 மண்சரிவு எச்சரிக்கை கண்டி மாவட்டத்தின் பன்வில, மெததும்பர, உடபலாத, தொலுவ, தெல்தோட்டை, கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, தெரணியாகலை, தெஹிஓவிட்ட, புலத்கோஹுபிட்டிய, நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை, நுவரெலியா, கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, ஓப்பநாயக்க, இம்புல்பே ஆகிய பகுதிகளுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கட்டம்–1 எச்சரிக்கை கேகாலை மாவட்டத்தின் கேகாலை பிரதேசத்திற்கும், நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குரன்கெத்த மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் நிவிதிகல, குருவிட்ட ஆகிய பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.












