மூதூர் பிரதேச சபையின் பதில் தவிசாளாராக தற்போதைய உதவித் தவிசாளர் கடமையேற்பு வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join -மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச சபையின் பதில் தவிசாளாராக தற்போதைய உதவித் தவிசாளர் பீ.டி.எம்.பைஸர் தமது கடமைகளை இன்…

மூதூர் பிரதேச சபையின் பதில் தவிசாளாராக தற்போதைய உதவித் தவிசாளர் கடமையேற்பு

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

-மூதூர் நிருபர்-

மூதூர் பிரதேச சபையின் பதில் தவிசாளாராக தற்போதைய உதவித் தவிசாளர் பீ.டி.எம்.பைஸர் தமது கடமைகளை இன்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மூதூர் பிரதேச சபையின் தவிசாளாராக கடமையாற்றிய எஸ்.பிரகலாதன் 2026.07.10 அன்று தவிசாளர் பதவியிலிருந்து விலகியதையடுத்து புதிய தவிசாளர் முறைப்படி தெரிவு செய்யப்படும்வரை சபையின் கடமைகளை கவனிக்கும் பொறுப்பு உள்ளூராட்சி மன்ற சட்ட விதிமுறைகளின் படி சபையின் உதவி தவிசாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மூதூர் பிரதேச சபையின் உதவி தவிசாளராக செயற்பட்டு வந்த பீ.டி.எம்.பைஸர் பதில் தவிசாளராக இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் செயலாளர், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது