பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் 15 கூட்டமைப்புகள் இணைந்து நாடளாவிய ரீதியில் கவன ஈர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தனர். அரசு மற்றும் மாகாண அரச சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒருங்கிணைந்த அபிவிருத…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் 15 கூட்டமைப்புகள் இணைந்து நாடளாவிய ரீதியில் கவன ஈர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தனர். அரசு மற்றும் மாகாண அரச சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களது உரிமைகளுக்காக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களுக்கு முன்பாகவும் போராட்டம் மதியம் 12:00 மணி முதல் முன்னெடுக்கப்பட்டது.கடந்த 27 வருடங்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இந்த கோரிக்கைகள் தொடர்பிலான போராட்டங்கள் தொடர்கின்றன. குறிப்பாக 1999ஆம் ஆண்டிலிருந்து சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முறையான சேவைப் பிரமாணக் குறிப்பு இதுவரை இல்லாதது கவலையளிக்கும் விடயமாகவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.