அரசியலில் இருந்து விலகும் எண்ணம் தமக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இன்று முற்பகல் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக சென்ற போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நாட்டுக்காக தான் செய்த சேவை போதாது எனவும், தற்போதைய பொருளாதா…
அரசியலில் இருந்து விலகும் எண்ணம் தமக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இன்று முற்பகல் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக சென்ற போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டுக்காக தான் செய்த சேவை போதாது எனவும், தற்போதைய பொருளாதார நெருக்கடியை எண்ணி வருத்துவதாகவும் மகிந்த குறிப்பிட்டுள்ளார். வருந்தும் மகிந்தயோசித உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவது குறித்து மகிந்தவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது, அரசாங்கத்திற்கு வேறு யாரும் இல்லை என்பதால் எங்களை ராஜபக்சர்களை பிடித்துக் கொள்வதாக மகிந்த பதிலளித்துள்ளார். நாங்கள் மக்களோடு இருக்கின்றோம் என்பதே இவ்வாறான நிலைமைக்கு ஒரே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் நாட்டு மக்களுடன் பயணிப்போம். அரசியலில் இருந்து ஒருபோதும் விலகப்போவதில்லை என மகிந்த கூறியுள்ளார்.அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு நாமலை களமிறங்கவுள்ளதாக பதிலளித்துள்ளார்.

