நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்துரம்முல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 26 வயதுடைய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வியாழக்கிழமை (16) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனும…

நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்துரம்முல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 26 வயதுடைய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வியாழக்கிழமை (16) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்துப்பாக்கி ஒன்றைப் பயன்படுத்தியே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அவர்களை கைது செய்வதற்காக நவகமுவ பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.