யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெர…

யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய சம்பவம், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கமராக்களில் பதிவாகியுள்ளது.

பதவி விலகல் இந்த தாக்குதல் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் உறுப்பினர் தலைமையிலான கும்பல் ஒன்றே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வீட்டார் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக அறிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கும்பலை மடக்கி பிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த நபர் தனது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பதவி விலகல் செய்வதாக தெரிவித்துள்ளார்.