பிரபல நடிகை ஜெனிபர் விங்கட், வில்லியம் இஸ்மாயில் என்பவரைத் திருமணம் செய்துகொண்டதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ பகிர்ந்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இவர்களது திருமணம் இங்கிலாந்தில் உள்ள தேவாலயம் ஒன்றில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மிகவு…
பிரபல நடிகை ஜெனிபர் விங்கட், வில்லியம் இஸ்மாயில் என்பவரைத் திருமணம் செய்துகொண்டதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ பகிர்ந்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இவர்களது திருமணம் இங்கிலாந்தில் உள்ள தேவாலயம் ஒன்றில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மிகவும் ரகசியமாக நடந்துள்ளது. இதுவரை இந்தத் தகவலைப் பொதுவெளியில் பகிராமல் இருந்த இந்த ஜோடி, தற்போது திருமண வீடியோவை வெளியிட்டுத் தங்களது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. புதுமணத் தம்பதிக்குத் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

