நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4247 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், இதுவரை குறைந்தது 903 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனவர்களின் எ…

நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4247 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், இதுவரை குறைந்தது 903 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 2502 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதில் காணாமல் போன 4247 பேரில் 3655 பேர் நேபாள குடிமக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் தீவிரம்

இதேவேளை, 592 வெளிநாட்டினரைப் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களில் நூற்றுக்கணக்கானோர் நேபாளத்தின் நீர்மின் நிலையங்களில் பணிபுரிந்த ஊழியர்கள் ஆவர். வெள்ளம் சூழ்ந்தபோது இவர்கள் சிலர் சுரங்கங்களுக்குள் பணிபுரிந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், இது குறித்த சீன அரசு ஊடகங்களின் தகவல்படி, திபெத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 546 பேர் காணாமல் போயுள்ளனர்.

தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.