பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் டிப்பர் லொறியொன்றும் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தைக்கு அருகில், நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், பேருந்து சாரதி உட்பட 20 பேர் காயமடைந்து ஒறுவல மற்றும் ஹோமாகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத்துருகிரிய காவல்துறையினர் தெரிவிக்கின்…

பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் டிப்பர் லொறியொன்றும் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தைக்கு அருகில், நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், பேருந்து சாரதி உட்பட 20 பேர் காயமடைந்து ஒறுவல மற்றும் ஹோமாகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத்துருகிரிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் இரு கால்களும் முறிந்து பலத்த காயமடைந்துள்ளதால், அவர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

கொழும்பிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் பணியாளர்களை ஏற்றிச் சென்ற குறித்த பேருந்து, அத்துருகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்தபோது, திடீரென வீதியை விட்டு விலகிச் சென்று, பொரளையிலிருந்து அத்துருகிரிய நோக்கி வந்த டிப்பர் லொறியுடன் நேருக்கு நேர் மோதி இன்று (17) அதிகாலை 4.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தினால் கொடகம - பொரளை வீதியில் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக கடும் வாகன நெரிசல் காணப்பட்டது.