நீர்க்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் இவ்வளவு தூரம் சென்றதற்குக் காரணம், கைதிகள் மீது இருந்த நம்பிக்கையே என முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க கூறியுள்ளார். நீர்க்கொழும்பு சிறையில் நடந்த மோதல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலு…

நீர்க்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் இவ்வளவு தூரம் சென்றதற்குக் காரணம், கைதிகள் மீது இருந்த நம்பிக்கையே என முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க கூறியுள்ளார்.

நீர்க்கொழும்பு சிறையில் நடந்த மோதல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு உள்ளக பிரச்சினை காரணமாக இரண்டு கைதிகள் இறந்தனர். அது அதிகாரிகள் வரை பரவவில்லை. மறுநாள் காலையில், எங்கள் அதிகாரிகள் குழு ஒன்று ஆயுதமின்றி அந்தச் சிறைக்குள் சென்றது.கைதிகள் மீதான நம்பிக்கைஇங்குள்ள மிகப்பெரிய மற்றும் பிரதான பிரச்சினை, கைதிகள் மீது இருந்த நம்பிக்கையே. எனது சிறை வாழ்க்கை கிட்டத்தட்ட 38 ஆண்டுகள். நான் எந்த நேரத்திலும் ஒரு கைதியை நம்பியதில்லை.அதனால்தான் நான் நினைக்கிறேன்... நமது அதிகாரிகள் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டார்கள். அவர்கள் கைதிகளை நம்பி சிறைக்குள் சென்றார்கள்.43,000 அதிகாரிகள் இருக்கும் இடத்தில், சுமார் 5500 அதிகாரிகள் கொண்ட ஒரு குழு சுமையைச் சுமக்க வேண்டியுள்ளது என்றுள்ளார்.