நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கலவரம் தொடர்பில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.பிரேதப் பரிசோதனையின் போது, சில அதிகாரிகளின் உடல்களில் கடுமையான தாக்குதலுக்கான அடையாளங்…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கலவரம் தொடர்பில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.பிரேதப் பரிசோதனையின் போது, சில அதிகாரிகளின் உடல்களில் கடுமையான தாக்குதலுக்கான அடையாளங்கள் பதிவாகியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உடலில் பலத்த காயங்கள், தாக்குதலால் ஏற்பட்டதாகக் கருதப்படும் காயத் தடயங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சில உயிரிழந்த அதிகாரிகளின் உடல்களில் கடுமையான உடல் துஷ்பிரயோகத்தை சுட்டிக்காட்டக்கூடிய காயங்கள் பதிவாகியுள்ளதாகவும், விசாரணைகளின் ஒரு பகுதியாக அவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, கலவரத்தின் போது காயமடைந்த கைதிகள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன. அதன்படி, குறைந்தது 14 கைதிகளுக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தின் பின்னணி, கலவரம் ஏற்பட்ட சூழ்நிலை, உயிரிழப்புகள் மற்றும் காயங்களுக்கு காரணமான நிகழ்வுகள் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இந்த விடயம் தொடர்பிலான முழுமையா தகவல்களை இந்த காணொளி மூலம் காணலாம்.....

