நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த அதிகாரிகளை பார்வையிட்ட நீதி அமைச்சர்! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளின் நலம் வி…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த அதிகாரிகளை பார்வையிட்ட நீதி அமைச்சர்!

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளின் நலம் விசாரிப்பதற்காக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நேற்று திங்கட்கிழமை பிற்பகல் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்றிருந்தார்.

வைத்தியசாலைக்குச் சென்ற அமைச்சர், காயமடைந்துள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் தேவையான வசதிகள் குறித்து அங்குள்ள வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 23 சிறைச்சாலை அதிகாரிகள் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையிலும், கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, 54 கைதிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.