நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து ஆராய விசாரணைக் குழு வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விரிவான வ…

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து ஆராய விசாரணைக் குழு

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோவின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதன் ஏனைய உறுப்பினர்களாக, ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி மிலிந்த குணதிலக்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணைக் குழுவின் செயலாளர்/அழைப்பாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கே.எல்.டி. அசேல நியமிக்கப்பட்டுள்ளார்.