நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பெண் கைதிகளும் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 166 பெண் கைதிகள் இ…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பெண் கைதிகளும் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 166 பெண் கைதிகள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த பெண் கைதிகள் வாரியபொல, போகம்பரை, அங்குணுகொலபெலஸ்ஸ மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.