நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணையை நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணையை நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.அமைதியற்ற சூழல்நேற்று (06) நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு தமது அதிகாரிகள் குழுவொன்றை அனுப்பிய போதிலும், அங்கு நிலவிய அமைதியற்ற சூழல் காரணமாக விசாரணைகளை முன்னெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் சில நாட்களில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்று குறித்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக நிமல் ஜி. புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நேற்று ஏற்பட்ட மோதலில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 17 கைதிகள் உள்ளடங்களாக 26 பேர் உயிரிழந்துள்ளனர்.சிலரது நிலை கவலைக்கிடம்மோதலில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், பலத்த காயமடைந்த 20 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 58 பேர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

