1983 ஜூலை கலவரம் என்பது தற்செயலாக நடந்த ஒன்றல்ல, அது அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கை என்று மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் வரலாற்று ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் 'களம்' நிகழ்ச்சியில், கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…

1983 ஜூலை கலவரம் என்பது தற்செயலாக நடந்த ஒன்றல்ல, அது அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கை என்று மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் வரலாற்று ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் 'களம்' நிகழ்ச்சியில், கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வெலிக்கடை மற்றும் நீர்கொழும்பு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்ற தமிழ் அரசியல் கைதிகளின் கண்கள் தோண்டப்பட்டும் நாக்குகள் வெட்டப்பட்டு கொலை செய்யபட்டுள்ளனர்.

குட்டிமணியின் நாக்கை வெட்டிய ஒரு சகோதர இனத்தை சேர்த்த ஒரு நபர் அதிலுள்ள இரத்தத்தை குடித்து விட்டு நான் ஒரு விடுதலை புலிகளின் இரத்தைதை குடித்து விட்டேன் என்று கத்தியுள்ளார்.

அன்றைய அரசு இந்த சிறை படுகொலைக்கு அனுமதித்தது என்பதை அப்போதைய அமைச்சர் ஒருவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

எனவே அதனை சமீபத்தில் நடந்த நீர்கொழும்பு சிறை கலவரத்துடன் ஒப்பிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் நடைபெற்ற தாக்குதல், கலவரத்தின் தொடக்கப் புள்ளியாக எவ்வாறு அமைந்தது என்பதையும் விளக்கினார்.

இந்த விடயங்கள் தொடர்பான விரிவான விளக்கங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...