நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பதவி விலக வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த கோரிக்கை விடுத்துள்ளார். இந்த அரசாங்கம் செயற்திறன் அற்ற ஒரு அரசாங்கம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். சிறைச்சாலை விவகாரம் டெங்கு ஒழிப்பு போன்ற பல துறைகளிலும் இந்த அரசாங்கம் இயல…
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பதவி விலக வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த கோரிக்கை விடுத்துள்ளார். இந்த அரசாங்கம் செயற்திறன் அற்ற ஒரு அரசாங்கம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். சிறைச்சாலை விவகாரம் டெங்கு ஒழிப்பு போன்ற பல துறைகளிலும் இந்த அரசாங்கம் இயலாமையை வெளிப்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீர் கொழும்பு சிறைச்சாலையில் இடம் பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார். நேற்றைய தினம் இடம் பெற்ற இந்த மோதல் சம்பவம் தொடர்பில் கண்டறிவதற்காக இன்று மாலையே நீதி அமைச்சர் சம்பவ இடத்திற்கு நேரில் செல்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். சம்பவத்திற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதுடன் மட்டும் நீதி அமைச்சர் நின்றுவிடக் கூடாது எனவும் தனது பதவியை அவர் விட்டு விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை விபரங்கள் நீதி அமைச்சருக்கு இன்னும் தெரியவில்லை என தொலவத்த குறிப்பிட்டுள்ளார்.

