அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஆயத்தமாகும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் தீர்மானத்திற்கு முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் சாதகமான கருத்தை தெரிவித்துள்ளார்.தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்றுக்கு விளக்கமளித்த போதே இ…

அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஆயத்தமாகும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் தீர்மானத்திற்கு முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் சாதகமான கருத்தை தெரிவித்துள்ளார்.தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்றுக்கு விளக்கமளித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடரும் அவரின் கருத்தில் எதிர்ப்பை வெளியிட்டதற்கான காரணம்இதற்கு முன்னர் சட்ட மா அதிபருக்கு மட்டுமே இதனால் பயன் கிடைக்கும் என்ற செய்தி அறிந்ததால் நான் அதற்கு எதிராக இருந்தேன். ஆனால் இப்போது அனைத்து நீதிபதிகளுக்கும் இதன் நன்மை கிடைக்கிறது. அவர்களுக்கும் மேலும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவது நாட்டிற்கு நல்லது என்றே நான் நினைக்கிறேன். மேன்முறையீட்டு நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக தற்போது ஒரு சிறிய பிரச்சினை எழுந்துள்ளது. அதற்கு எதிராக மக்கள் கூறுவது என்னவென்றால், நீதிபதிகள் தங்களின் சொந்தப் பிரச்சினைகள் குறித்து தாங்களே தீர்மானம் எடுக்கிறார்கள் என்பதாகும். அதாவது, உயர் நீதிமன்றம் இது குறித்து ஆராயும்போது, தங்களுக்குச் சாதகமான விடயங்களை தீர்மானிப்பது தவறானது என்ற கருத்தை சிலர் கூறுகின்றனர். ஆனால், இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வருமான வரி (Income Tax) தொடர்பான பிரச்சினை எழுந்தபோது, நீதிபதிகளுக்கு விலக்களிக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறியபோதிலும், உச்சநீதிமன்ற நீதிபதிகளும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று உயநீதிமன்றமே தீர்ப்பளித்தது. அவர்கள் தங்களுக்கு எதிராகவும் தீர்மானங்களை எடுத்திருக்கிறார்கள். எனவே, அவர்கள் தவறான முறையில் தீர்மானம் எடுக்கிறார்கள் என்று நாம் கூற முடியாது. ஏற்றுக் கொள்வதற்கான காரணங்கள்அடுத்தது, இந்த யோசனையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்டுவரவில்லை. இது நாடாளுமன்றத்தினால் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானமாகும்.அதனால் இதில் எந்தத் தவறும் இல்லை என்று நான் நினைக்கிறேன். மேலும், கனிஷ்ட நீதிபதிகளின் பதவி உயர்வு (Promotions) தாமதமாகும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு தாமதமானாலும், அவர்களும் உயர் நிலைக்குச் செல்லும்போது மேலும் இரண்டு ஆண்டுகள் கூடுதலாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். எனவே அவர்களுக்கு இதனால் எந்தப் பாதகமும் ஏற்படாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், தேங்கிக் கிடக்கும் வழக்கையெல்லாம் விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும் கூறப்படுகிறது. அனுபவமிக்க நீதிபதிகளை வைத்துக்கொண்டு இப்பணியைத் தொடர்ந்து செய்வது நல்லது. எனவே இதற்கு நான் எதிரப்பில்லை. 22ஆவது திருத்தத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட முடியாது. அவ்வாறு செய்தால் இந்த நீதிபதிகளின் அனுபவம் நமக்குக் கிடைக்காமல் போய்விடும் என குறிப்பிட்டுள்ளார்.