பிரதேச செயலகப் பிரிவில், கரந்தகொல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவில் இராவணா எல்ல சரணாலயத்தின் உள்ளக குகைத் தொகுதியில் அமைந்துள்ள நில்திய தடாகமானது அரிய வகையான நீர் மூலமாகும். அவ்விடத்தில் காணப்படுகின்ற விசேடமான பூகோளப் பண்புகளால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்த…
பிரதேச செயலகப் பிரிவில், கரந்தகொல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவில் இராவணா எல்ல சரணாலயத்தின் உள்ளக குகைத் தொகுதியில் அமைந்துள்ள நில்திய தடாகமானது அரிய வகையான நீர் மூலமாகும். அவ்விடத்தில் காணப்படுகின்ற விசேடமான பூகோளப் பண்புகளால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமான ஒரு உல்லாசக் காட்சிகாண் இடமாக உள்ளது.
நில்திய தடாகம் பாதுகாக்கப்பட வேண்டிய அரியவகை இயற்கை வளமாக இருக்கின்றமையால், அவ்விடத்தில் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை மிகவும் கண்காணிப்புடனும் ஒழுங்குமுறைப்படுத்தலுடனும் மேற்கொள்வது அத்தியாவசியப் பணியாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான முன்மொழிவுகள் மற்றும் விதந்துரைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் உரிய அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய வகையில் தொழில்நுட்பக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், இக்குழுவால் ஆய்வறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில், சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்குத் தயாரிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளைச் சட்டவரைஞரால் சரிபார்த்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்கள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, உரிய ஒழுங்குவிதிகளை வர்த்தமானியில் வெளியிடுவதற்காக சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.





-559122_850x460.jpg)






