நேபாள- திபெத் எல்லையைத் தாக்கிய திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. இந்த அனர்த்தத்தில் சிக்கி நேபாளத்தில் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.பலர் மாயம் காணாமல் போனவர்களில் இந்…

நேபாள- திபெத் எல்லையைத் தாக்கிய திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது.

இந்த அனர்த்தத்தில் சிக்கி நேபாளத்தில் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.பலர் மாயம்

காணாமல் போனவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும், அமெரிக்காவைச் சேர்ந்த 54 பேரும், இங்கிலாந்தைச் சேர்ந்த 33 பேரும் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரும் அடங்குகின்றனர்.

இந்த அனர்த்தத்தில் திபெத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 265 பேரைக் காணவில்லை என சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் காரணமாகவே வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர். எனினும் மண்சரிவு காரணமாகவே இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

இதன்காரணமாக அந்த பகுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகளும், ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

அதேநேரம் வௌ்ளம் காரணமாக பாரியளவில் உட்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.